Dinaseithy

News

இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 2லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து73ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசி வரும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு 4லட்சத்தை தாண்டிச் சென்றது. ஆனால், தொடர் முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவலும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருலட்சத்து73ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய எண்ணிக்கையை விட 13ஆயிரம் என்ற அளவில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

இருப்பினும், பெருந்தொற்று பாதிப்புக்கு ஒரு நாளில் 3,617 பேர் பலியாகியுள்ளனர் . தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22லட்சத்து28ஆயிரத்து724ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2லட்சத்து 84ஆயிரத்து601 பேர் நலமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு விகிதமும் 8.36சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை 20கோடியே 89லட்சத்து 02ஆயிரத்து 445 பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *